14.9 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் இன்னும் வழங்கவில்லை...

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நடப்பாண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில், 14 புள்ளி 9 டி.எம்.சி. நீரை வழங்காமல் கர்நாடக அரசு நிலுவையில் வைத்துள்ளது.

14.9 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் இன்னும் வழங்கவில்லை...

நேற்று கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று இரு அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 14 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி, சேலம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 81 புள்ளி 99 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 942 கன அடியாகவும் குறைந்துள்ளது.

பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய அணையின் நீர் இருப்பு 43 புள்ளி 94 டி.எம்.சி. ஆக உள்ளது. உச்ச நீதிமன்ற  தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு ஜூன் 1 முதல் மே 31 வரை 177 புள்ளி 25 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதில் இன்னும் 14 புள்ளி 9 டி.எம்.சி. நீரை வழங்காமல் கர்நாடக அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிலையில், மாதா மாதம் வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கினால் மட்டுமே குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.