மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புமனு  

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வாக்குபதிவு அக்டோபர் 4 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் இருவரும் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

அதிமுகவின்  மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இரு இடங்களும் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து, திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளராக கனிமொழி மற்றும் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இரு வேட்பாளர்களும் பிற்பகல் 12 மணியளவில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.. காலியான இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கிய நிலையில், 22-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை வேட்பு மனு பரிசிலினையும், செப்டம்பர் 27ம் தேதி மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.