கடந்த ஆட்சியை காட்டிலும்...இந்த ஆட்சியில் 2 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்!!

கடந்த ஆட்சியை காட்டிலும்...இந்த ஆட்சியில் 2 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்!!

கடந்த ஆட்சியைக் காட்டிலும், இந்த ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு இரண்டு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும்  மாற்றுத்திறனாளிகள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தொட்டில் குழந்தை திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மின் வாகனத்திட்டம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!


இதற்கு பதில் அளித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத் திறனாளிகள் துறைக்கு, கடந்த ஆட்சியில், 660 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமாக 1,106 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், திமுக ஆட்சி பொறுப்பற்ற 2 ஆண்டில் 1,800 மின் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொட்டில் குழந்தை திட்டத்தில் 1,346 ஆண் குழந்தைகளும், 4, 557 பெண் குழந்தைகளும் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.