எழும்பூர் கண் மருத்துவமனையின் 200வது ஆண்டுவிழா...புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!

எழும்பூர் கண் மருத்துவமனையின் 200வது ஆண்டுவிழா...புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் 65 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அரசு கண் மருத்துவமனையின் ஆண்டு விழா:

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையின் 200வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில்  கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 6 தளங்களுடன் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தாம்பரம் அரசு தாலுகா மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு 65 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார்.

இவ்வாறு இந்நிகழ்வில் மொத்தமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவ சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட 247 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 26 மருத்துவமனைகளுக்கு மின்கல ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/You-cant-imagine-how-scared-we-were-Taraiya-Massacre-Justice-will-be-served

மேலும், இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.