"ஒரே ஆட்டோவில் 25 பிஞ்சுகள்".. எது வேண்டுமானாலும் அவரிடம் கேளுங்கள்.. ஆவேச ஓட்டுனருக்கு ஆப்பு வைத்த காவல்துறை!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தனியார் துவக்கப் பள்ளிக்கு ஒரே ஆட்டோவில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் அவலம் அரங்கேறியுள்ளது.

"ஒரே ஆட்டோவில் 25 பிஞ்சுகள்".. எது வேண்டுமானாலும் அவரிடம் கேளுங்கள்.. ஆவேச ஓட்டுனருக்கு ஆப்பு வைத்த காவல்துறை!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது ஆவுடையானூர் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான  துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் மருதடியூர் மற்றும் சாலையடியூர் கிராமங்களில் இருந்து படித்து வரும் மாணவ, மாணவிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோரை ஒரே ஆட்டோவில் ஆடு, மாடுகளை அடைப்பது போன்று பள்ளிக்கு ஏற்றி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதையறிந்து படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர்களை தடுத்த பள்ளி ஆசிரியை தகாத வார்த்தையில் பேசியதுடன், எது வேண்டுமானாலும் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொள்ளும்படி ஆவேசமாக பேசினார்.

இந்த அவலம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இனி இது போன்ற தவறுகள் நடைபெறாது என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.