தனித்தீவாக மாறிய 3 கிராமங்கள்...நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்!

தனித்தீவாக மாறிய 3 கிராமங்கள்...நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்!

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் மூன்று கிராமங்கள் தனித்தீவாக மாறி உள்ளது. படகுகள் மூலம் கிராமங்களுக்கு சென்ற கடலூர் மாவட்ட ஆட்சியர் பொது மக்களை சந்தித்து  ஆறுதல் கூறினார்

தனித்தீவாக மாறிய மூன்று கிராமங்கள்:

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் ஓடி கடலில் கலக்கிறது.  இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி உள்ளிட்ட 3 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் இந்த கிராமம் தனித்தீவாக மாறியது. பல குடும்பங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். 

இதையும் படிக்க: https://www. malaimurasu.com/posts/cover-story/Popularity-upset-about-joining-OPS-team

நேரில் பார்வையிட வந்த ஆட்சியர்:

தனித்தீவாக மாறிய ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்திற்கு படகுகள் முலம் வந்த மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் இன்னும் 2 தினங்களில் படிப்படியாக குறையும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.