இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நடப்பாண்டில் 3,510 வீடுகள் கட்டித்தரப்படும்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நடப்பாண்டில் மூவாயிரத்து 510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், முதற்கட்டமாக 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், இலங்கை தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 317 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும் என்றும், இலங்கை தமிழரின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவருக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசு ஏற்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள் மற்றும் சாலைகள் சீரமைக்கப்படும் என கூறியுள்ளார். அகதிகள் குடும்பத்திற்கு விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்படும். பாலிடெக்னிக்கில் படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.