பிரதமரிடம் ஈபிஎஸ் முன்வைத்த 4 கோரிக்கைகள் என்னென்ன...!

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட தமிழக நலன் குறித்த 4 கோரிக்கைகளை பிரதமரிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார்.

பிரதமரிடம் ஈபிஎஸ் முன்வைத்த 4 கோரிக்கைகள் என்னென்ன...!

சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் மோடியை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். 

அப்போது, தமிழக நலன் குறித்த 4 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உதான் திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை தேவை என்றும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தொடங்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம்  எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.