கனமழையால் விழுந்த 40- அடி உயர BSNL டவர் ...!

கனமழையால்  விழுந்த 40- அடி  உயர BSNL டவர் ...!

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்ட 40 அடி BSNL டவர் நேற்று பெய்த இடி மின்னலுடன் பலத்த சூரைக் காற்று மழையால் செல்போன் டவர் சரிந்து மிகவும் ஆபத்தான நிலையில்  தொங்கியபடி இருந்தது. 

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அருகில் சம்பவம் நடைபெற்றதால் பக்தர்கள் வழிப்போக்கர்கள் மேல் விழுந்து விடக்கூடாது எனத்  தீயணைப்பு துறையினர் அவ்வழியாக எவ்வித வாகனங்களும் பொதுமக்களும் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைத்து யாரும் அவ்வழியாக செல்லாமல் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆபத்தான நிலையில் தனியார் ஓட்டல் கட்டிடத்தில் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் BSNL டவரை அகற்றும் பணியில் சுமார் 2 மணி நேரம் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இரவு நேரம் என்பதால் டவர் அகற்ற முடியாமல் சிரமப்பட்ட தீயணைப்பு துறையினர் இன்று காலை 15கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் துறை அதிகாரிகள் நேரில் வந்து சரிந்து விழுந்த டவரை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 இதையும் படிக்க } நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில்......... கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தொட்டிகட்டும் பணி...! -அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார்.

மீட்டெடுக்கும் பணிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தடுப்பு கம்பிகள் போட்டபட்டது, ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு பத்திரமாக கனமழையினால் சாய்ந்த டவரை பி.எஸ்.என்.எல். துறை அதிகாரிகள் மீட்டெடுத்தனர். இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 இதையும் படிக்க     }  12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? - அமைச்சர் அன்பில் மகேஸ்