400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்...!

அம்மாபட்டி அருள்மிகு அங்காள ஈஸ்வரி ,வீர வெங்கட்டம்மாள், பாப்பாத்தியம்மாள் கோவில் கும்பாபிஷேகம்.

400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்...!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம், அம்மாபட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அங்காள ஈஸ்வரி, வீர வெங்கட் டம்மாள் ,பாப்பாத்தி அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களான சிவபெருமான் ,விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ,கருப்பணசாமி ,ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களாக யாகசாலை பூஜை செய்யப்பட்டு ,கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் முடிவடைந்து ,பூர்ணாகதி நிகழ்ச்சி நடந்தது .

இதனையடுத்து  கடம் புறப்பாடாகி கோவிலின் விமானக் கலசத்திற்கு பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வு நடந்தது. இதனையடுத்து மூலவர்களுக்கு பால், பழம், நெய், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.