சென்னையில் பாதுகாப்பு பணியில் 4000 ஆயிரம் போலீசார்!

சென்னையில் குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுகின்றனர்.

சென்னையில் பாதுகாப்பு பணியில் 4000 ஆயிரம் போலீசார்!

சென்னையில் குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுகின்றனர்.

சென்னை யில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி திரு உருவ படம் திறப்பு நிகழ்ச்சி வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் புகைப்படத்தை திறந்துவைக்க உள்ளார். 

இந்த நிகழ்விற்காக சென்னை வருகை தரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லக்கூடிய விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரையும் ஆளுநர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலகம் வரை மொத்தம் சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக நாளை மதியம் 12:30 மணி அளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரையிலும் ஆளுநர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலகம் வரையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லக்கூடிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளனர்.