அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகிய 41 பேருக்கு ஜாமீன்

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கைதாகிய 41 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த டாஸ்மாக் பார் டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 300க்கு மேற்பட்டோர், எம்.ஆர்.சி. நகரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களில் 46 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, சைதாப்பேட்டை 23வது பெருநகர நீதித்துறை நடுவர் கௌதம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் 41 பேருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  5 பேருக்கு இன்று ஜாமீன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.