46 வது சென்னை புத்தக கண்காட்சி...! அரங்கு எண் 286...!

46 வது சென்னை புத்தக கண்காட்சி...! அரங்கு எண் 286...!

46 வது சென்னை புத்தக கண்காட்சியில்  எண் 286 ல் திரைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பாக  கூண்டுக்குள் வானம் என்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 46 வது புத்தக கண்காட்சியை 1000 அரங்குகளுடன் பிரம்மாண்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.தமிழ்நடு அரசுடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த கண்காட்சியானது வருகிற 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   

இந்நிலையில், கண்காட்சியில் எண் 286 ல் திரைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பாக கூண்டுக்குள் வானம் என்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில்,  “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்கு தரப்பட வேண்டும்” என்ற அறிஞர் அண்ணாவின் வாசகங்களும் “ எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்ற சுவாமி விவேகானந்தரின் வாசகங்களையும் தாங்கி நிற்கிறது. 

இந்த அரங்கின் நோக்கம், 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், பெண்கள் தனி கிளை சிறைகள் மற்றும் சிறைகள் உள்ளன. சிறையில் இருக்கும் நூலக புத்தகங்களை சிறை வாசிகள் வாசித்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பதிப்பாளர்கள் தானமாக வழங்கும் புத்தகங்கள் இந்த அரங்கின் வாயிலாக வாசிக்க பெற்று அனுப்பப்படும். இதன் மூலம் சிறை கைதிகள் மனம் திருந்த வாய்ப்பு உருவாக்கும் விதமாக இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம்...! உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!