தமிழகம் முழுவதும் 4-வது மெகா தடுப்பூசி மையம்..! 20,000 மெகா தடுப்பூசி மையம்..!

தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் மெகா தடுப்பூசி மையம் செயல்பட உள்ளது. 

தமிழகம் முழுவதும் 4-வது மெகா தடுப்பூசி மையம்..! 20,000 மெகா தடுப்பூசி மையம்..!

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்  மூலம் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனையை படைத்தது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல, கடந்த 19 ஆம் தேதி இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு 16 லட்சத்து 43 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டன். இதேபோல், கடந்த 26 ஆம் தேதி மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும்  இன்று நான்காவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 20 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது. தற்போது, தமிழக அரசின் கையிருப்பில் 25 லட்சம் தடுப்பூசி உள்ளது. அதனை தேவைக்கு ஏற்றவாறு மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பபட்டுள்ளது.   இன்று தடுப்பூசி செலுத்த தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிமையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தமாக 20 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம்கள் மாலை 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த முகாமில் பங்குபெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.