கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 5 நாட்கள் அரசுமுறைப் பயணம்.. இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், கடந்த 5 நாட்களாக நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு சென்னை திரும்புகிறார்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 5 நாட்கள் அரசுமுறைப் பயணம்.. இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அரசு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18ந் தேதி இரவு கோவை சென்றார்.

மறுநாள் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஒராண்டு சாதனை ஒவிய கண்காட்சியை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 3 மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். கோவை நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு 19ந் தேதி நீலகிரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணமானார்.

இருபதாம் தேதி, 124வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர்,  பின்னர் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் ராணுவ வீரர்கள் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.  

இதையடுத்து இன்று உதகை அருகே உள்ள பகல்கோடு மந்து என்னும் பகுதியில் பழங்குடியின தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை பார்வையிட்டார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தோடர் இன மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்பு தோடர் இன மக்களுடன் முதலமைச்சர் நடனமாடி மகிழ்ந்தார்.

கோவை, நீலகிரியில் 5 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் இருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் வழியாக கோவை விமான நிலையத்திற்கு சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து அவர், விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.