பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து- 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், கடையில் இருந்த பொருட்கள் நாசமாகின. 

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து- 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாலசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலிஇடத்தில், பழனியை சேர்ந்த ஜாபர் என்பவர் குடம் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்திவருகிறார்.

இந்த கடையில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. கடையில் விற்பனைக்கான இருந்தது பிளாஸ்டிக் பொருள் என்பதால் எளிதாக தீ பரவத் தொடங்கி மளமளவென்று கடை முழுவதும் எரியத்தொடங்கியது.பற்றி எரிந்த தீயால் கடையில் இருந்த  பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் பொருள் என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தில் 5லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது குறிப்பிடதக்கது.