5% மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவில்லை...அன்பில் மகேஷ் பேட்டி!

5% மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவில்லை...அன்பில் மகேஷ் பேட்டி!

2022 - 2023 கல்வியாண்டு பொதுத் தேர்வில் 5 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்று வந்தாலும், மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி ஒரு பக்கம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் ப டிக்க : தொடரும் மாணவர்களின் தற்கொலை...ஐ.ஐ. டி.அளித்த விளக்கம்...அறிக்கை வெளியிட்ட நெல்லை முபராக்!

வழக்கமாக பொதுத்தேர்வில்  4.5,  4.6 சதவீதம் தான் தேர்வு எழுதாமல் இருப்பார்கள், ஆனால் இந்த ஆண்டு 5 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கூறிய அவர், இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், தேர்ச்சி பெறாத மாணவர்களையும், தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து சிறப்பு பயிற்சி அளித்து ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைத்து விடுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.