ஒரே நாளில் 5,535 பேருக்கு கொரோனா....

ஒரே நாளில் 5,535 பேருக்கு கொரோனா....

இந்தியாவில் 6 மாதங்களுக்குப்பின் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் நாள்தோறும் 11 ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 335 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 587 ஆகவும் அதிகரித்துள்ளது. சுமார் 6 மாதங்களுக்குப்பின் இந்தியாவில் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 82 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறையினர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாள்தோறும், 11 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.