அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்  6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க கோரியும், தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்காவிடில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.