7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா ?....அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...!!

தமிழகத்தில் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று இருக்கலாம் என முதல் கட்ட பரிசோதனையில் தகவல் கிடைத்துள்ளாதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா ?....அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா  நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக  நைஜிரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கும் அவர் தொடர்புடைய அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் S-ஜீன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பாக இருக்குமோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அவர்கள் 7 பேரின் மாதிரிகள் பெங்களூருக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் பரிசோனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளையோ தெரிய வரும் என்றார்.

மேலும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளது, இந்தியாவில் இதுவரை 41 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    11,481 பேர் ஹை ரிஸ்க்  நாடுகளில் இருந்தும்,  58-ஆயிரம் பேர் மற்ற நாடுகளில் இருந்தும்  வந்துள்ளனர் . அதில் 1,691 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மரபணு பகுப்பாய்வில் 4-பேருக்கு சாதாரண கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் 13 எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளிலும் சாலை மார்கமாக வரும் நபர்களும் கண்காணிக்கப்படுகின்றனர் என கூறிய அவர், இந்த நேரத்தில் தேவையற்ற பதட்டம் தேவையில்லை. பொது மக்கள் முக கவசம், மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.