புனேவில் இருந்து 7.2 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை

புனேவில் இருந்து 7.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 60 பார்சகளில் விமானத்தில் மூலம் இன்று சென்னை வந்தடைந்தன.

புனேவில் இருந்து 7.2 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை

கொரோனா வைரஸ் மூன்றாம் அலை தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதோடு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும்  போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.மேலும் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்களையும் நடத்தி வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுவதையோட்டி, தமிழக முதலமைச்சா் மத்திய அரசிடம் வாரத்திற்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளாா். மத்திய  சுகாதாரத்துறையும் தமிழ்நாட்டிற்கு சீரான இடைவெளியில் தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் மத்திய  சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு இன்று மேலும் 7. 2   லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை  புனேவில் உள்ள மத்திய  மருத்துவ கிடங்கிலிருந்து விடுவித்துள்ளது. அதன்படி 7.2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 60  பாா்சல்கள்  இண்டிகோ விமானம் மூலம் புனேவிலிருந்து சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தது.

சென்னை விமானநிலைய அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை,தமிழ்நாடு மக்கள்  நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை  தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ்  அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.