75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் - ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 750 மரக்கன்றுகள் நடும் விழா..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 750 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் - ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 750 மரக்கன்றுகள் நடும் விழா..!

இந்தியா சுதந்திரமடைந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதியோடு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. 75 ஆண்டுகள் என்பது பவள விழா. எனவே அதனை சிறப்பாக கொண்டாட  மத்திய அரசும், மாநில அரசும் திட்டமிட்டுள்ளன.

 

அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 750 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதீர் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புவி வெப்பமயமாதலை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் தேக்கு, பூவரசம் வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ரோட்டரி சங்கம் மற்றும் லயன் சங்கத்தினர் ரயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து முதல் கட்டமாக 250 மரக்கன்றுகள் ரயில்வே வெளிப்புற பகுதிகளில் நடப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் கல்வி பாதுகாப்பு படை போலீசார் கலந்து கொண்டனர்.