250ML-7UP கண்ணாடி பாட்டிலை வயிற்றினுள் வைத்திருந்த நபர்!!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளியின் வயிற்றில் இருந்து குளிர்பான பாட்டில் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த 45 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், ஆசன வாயில் இருநது ரத்தம் வருவதாக கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மருத்துவமனையில் எக்ஸ்ரே மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, மாற்றுத்திறனாளி வயிற்றில் கண்ணாடி பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.  

இதையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் ராஜ் மோகன் ஆலோசனையின் படி அறுவை சிகிச்சை நிபுணர் நிர்மலா தேவி தலைமையில் மருத்துவர்கள் குழு, மாற்றுத்திறனாளியை முழு பரிசோதனை செய்து பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டன்ர். 

சுமார் 2 மணி நேரம் நடந்த சிகிச்சைக்கு பிறகு அவரது வயிற்றில் இருந்து 250 மில்லி கொள்ளளவு கொண்ட 7அப் பாட்டில் எடுக்கப்பட்டது. இந்த செவன் அப் பாட்டில் எப்படி வந்தது என மாற்றுத்திறனாளியிடம் கேட்டபோது, யாரோ ஒருவர் தனக்கு இப்படி செலுத்தி விட்டனர் என கூறி அழுதுள்ளார். 

அறுவை சிகிச்சைக்கு பிறகு மாற்றுத்திறநாளியின் உடல் நிலை சீராகவே இருந்தாலும், அவரது குடல் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் மாற்றுத்திறனாளி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.