“85% வாக்குறுதிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றம்”...செந்தில் பாலாஜி விளக்கம்!

“85% வாக்குறுதிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றம்”...செந்தில் பாலாஜி விளக்கம்!

அதிமுக ஆட்சியில் இழந்த தமிழகத்தின் பெருமைகளை திமுக அரசு மீட்டெடுத்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய செந்தில்பாலாஜி:

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி, கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

85% வாக்குறுதிகள் நிறைவேற்றம்:

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரி செய்து, தேர்தல் வாக்குறுதிகளை திமுக 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க: 49 ஆண்டுகள் ஆகியும் வீரியம் குறையாத பெரியாரியம்; முதலமைச்சர் மரியாதை!

தமிழகத்தின் பெருமைகளை மீட்டெடுத்த திமுக:

தொடர்ந்து பேசிய அவர்,  கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் இழந்த பெருமைகளை திமுக அரசு மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதலமைச்சர் வழங்கி இருப்பதாக செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.