நெல் கொள்முதல் நிலையத்தில் 90 நெல்மூட்டைகள் திருட்டு...!

பரமக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 90 நெல் மூடைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையத்தில் 90 நெல்மூட்டைகள் திருட்டு...!

பரமக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 90 நெல் மூடைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, பார்த்திபனூர், கொத்தங்குளம்  உள்ளிட்ட 44 இடங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. பரமக்குடி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தடுத்தலாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற விவசாயி 450 நெல்மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளார். 250 மூட்டைகளை அரசு கொள்முதல் செய்த நிலையில், 200 மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்து பார்த்தபோது அதில் 90 நெல்மூட்டைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதனை அடுத்து மலைச்சாமி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யாததால் நெல்மூட்டைகளை திருடிய மர்மநபர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பரமக்குடியில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி-யின் 90 நெல்மூட்டைகளை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.