கலாஷேத்ரா விவகாரம் : 200 பக்கம் கொண்ட அறிக்கை இறையன்புவிடம் தாக்கல்...!

கலாஷேத்ரா விவகாரம் : 200 பக்கம் கொண்ட அறிக்கை இறையன்புவிடம் தாக்கல்...!

கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவிகளின் தொடர் போராட்டத்தின் பலனாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கலாஷேத்ரா விவகாரத்தில் பாலியல் புகாருக்கு உள்ளான 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியர், கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

இதையும் படிக்க : சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாடு...உரையாற்றிய முதலமைச்சர்!

இதனிடையே, பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத் மற்றும் சாய் கிருஷ்ணா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்படுள்ளதாக கல்லூரி நிர்வாகம் மாணவியரிடம் வாய் மொழி உத்தரவு அளித்துள்ளது. அத்துடன், மாணவிகள் தரப்பில் முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.  

இந்நிலையில், கல்லூரி மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி, 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் தாக்கல் செய்துள்ளார்.