தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 66 ஆயிரத்து 800 பயணிகள் முன்பதிவு!

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 66 ஆயிரத்து 800 பயணிகள் முன்பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதற்காக 66 ஆயிரத்து 800 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் 1320 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் 52800 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்

இன்று 1670 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் 66 ஆயிரத்து 800 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல நாளை சென்னையில் இருந்து 1270 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் 42 ஆயிரம் பயணிகள் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் தனியார் பேருந்துகளின் கூடுதல் கட்டண வசூல் குறித்து இதுவரை 11 புகார்கள் வந்ததாகவும் இதுகுறித்து பேருந்து உரிமையாளர்களிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.