மதம் மாறிய பிள்ளைகள் : ரூ.2கோடி சொத்தை கோயிலுக்கு எழுதி வைத்த முதியவர்...!

பெற்ற பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காததால் நடந்த சம்பவம்...!

மதம் மாறிய பிள்ளைகள் : ரூ.2கோடி சொத்தை கோயிலுக்கு எழுதி வைத்த முதியவர்...!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெற்ற பிள்ளைகள் சொல் பேச்சை கேட்காமல் மதம் மாறியதால், ரூ.2கோடி மதிப்புள்ள குடியிருப்பு கட்டிடத்தை, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தந்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். முனுசாமி முதலியார் அவின்யூவில்  வசித்து வரும் வேலாயுதம் என்பவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூவருமே அரசுத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, வேலாயுதத்தின் மகன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி காதல் திருமணம் செய்துள்ளார். இவரை தொடர்ந்து இரு மகள்களும் இதைப்போல மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேலாயுதம், தமக்கு சொந்தமான ரூ.2கோடி மதிப்புள்ள குடியிருப்பு கட்டிடத்தை பிள்ளைகளின் பெயருக்கு எழுதி வைக்காமல், தமது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையாக கொடுப்பதாக பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும், அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார். அப்போது, வேலாயுதத்திற்கு சால்வையும் மாலையும் அணிவித்து கவுரவித்தத அமைச்சர் சேகர்பாபு நன்றி தெரிவித்தார்.