சாலையின் நடுவே மின்கம்பம்; மனு அளித்தால் நடவடிக்கை இல்லை: அடாவடித்தனம் செய்யும் அதிகாரி!

சாலையின் நடுவே மின்கம்பம்; மனு அளித்தால் நடவடிக்கை இல்லை: அடாவடித்தனம் செய்யும் அதிகாரி!

திருப்பத்தூர்: ஒற்றரின் நடுவே சாலை அமைக்கும் பணியில், பொறுப்பு இல்லாமல் செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் உள்ளது சின்ன சொக்கனாம்பட்டி. இந்த ஊருக்கு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமார். சமீபத்தில், இந்த ஊருக்கு, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து, சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலை அமைக்கும் இடத்தில், நடுவே மின்கம்பம் இருப்பதாய் அறிந்தும், அதை அப்புறப்படுத்தாமல், அப்படியே சாலை அமைத்துள்ளனர். 

மேலும் சாலையும் தரமற்ற நிலையில் அமைக்கப்பட்டுளள்து. கால்களை வைத்து தேய்த்தால், சாலை பெயர்ந்து வருகின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவரிடம், இது குறித்து மனு ஒன்றை அளித்தார், அப்பகுதி இளைஞர்.  

ஊராட்சி மன்ற தலைவர், இளைஞரின் மனுவை கண்டுகொள்ளாததால், இளைஞர் பத்திரிகையாளர்களிடம் இது குறித்து பேசியுள்ளார். இது குறித்து, அந்த இளைஞரும் தலைவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட பொழுது, சாலை போடா தெரிந்த எனக்கு, மின் கம்பத்தை அப்புறப்படுத்த தெரியாத?, இனிமேல் பத்திரிகைக்காரர்களையே வைத்து அந்த வேலையை செய்துகொள், என பொறுப்பின்மையுடன் பேசியுள்ளார்.

குமார், தனது வேலையை சீராக செய்யாமல், தரமற்ற சாலையை அமைத்து விட்டு, ஒரு ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு இல்லாமல் செயல்படுவது, அப்பகுதி மக்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.


இதையும் படிக்க: " கழிவுநீர் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறக்க அனுமதிக்க கூடாது " - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு...!