மீண்டு வரும் பாரம்பரியம்; பொன்விழா காணும் தமிழச்சி வள்ளி கும்மி குழு..!

மீண்டு வரும் பாரம்பரியம்; பொன்விழா காணும்  தமிழச்சி வள்ளி கும்மி குழு..!

திருப்பூர் மாவட்டம் வள்ளி இறைச்சல் பகுதியை சேர்ந்த தமிழச்சி வள்ளி கும்மி குழுவின் 50வது பொன்விழா நிகழ்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் திருப்பூர்  மாவட்டம் தமிழச்சி வள்ளி கும்மி குழுவின் பொன்விழா நிகழ்ச்சியை முன்னிட்டு முருகன்-வள்ளி திருமண முறையை பிரதிபலிக்கும் விதமாக கும்மி அடித்து வழிபாடு நடத்தினர்.    

திருப்பூர் மாவட்டம் வள்ளி இறைச்சல் பகுதியைச் சேர்ந்த தமிழச்சி வள்ளி கும்மி குழுவின் 50-வது பொன்விழா நிகழ்ச்சி  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நடைபெற்றறது. இதனை முன்னிட்டு  வள்ளி  கும்மி குழு சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கும்மி பாடல்களை பாடி  கும்மி  நடனம் ஆடினர். 

இதில், குழந்தைகள் முதல் பெண்கள்  மற்றும் ஆண்ககளும் ஒரே மாதிரியான வண்ண உடைகளை அணிந்து கொண்டு முருகன் - வள்ளி திருமண முறையை பிரதிபலிக்கும் விதமாக பாடல்களை பாடி கும்மி ஆட்டம் ஆடினர்.   இதனை சுமாமியை தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்களும் கண்டு கழித்து பக்தி ஆராவாரம் செய்தனர். 

அழிந்து வரும்  பாரம்பரியமிக்க வள்ளி கும்மி நடனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறிய கலைக்கழுவினர்,  தமிழர்களின் வாழ்வியலுடன் ஒன்றிய  முருகன் வள்ளி திருமணத்தை பாடல்கள் பாடி நடனம் மூலம் பிரதிபலிக்கும் போது புத்துணர்ச்சி பிறப்பதாகவும் இதன் மூலம் வேண்டுதல்களும் நிறைவேறுவதாக நெகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிக்க     | பூசாரியின் அதிர்ச்சியளிக்கும் வழிபாடு!