இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை...அமைச்சர் சொல்வது என்ன?

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை...அமைச்சர் சொல்வது என்ன?

இந்தியாவிலே முதல் முறையாக அவசர மருத்துவ சிகிச்சைக்கு என்று தனித் துறை தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். 

அவசர மருத்துவ பட்டமேற்படிப்புக்கான தொடக்கவிழா:

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவ (MD ) பட்டமேற்படிப்புக்கான தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மேற்படிப்புக்கான வகுப்பை தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் தான் முதன்முறை:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்தியாவிலே முதல் முறையாக அவசர மருத்துவ சிகிச்சைக்கான துறை தமிழகத்தில் தான் துவங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: நாளை வாக்கு எண்ணிக்கை...தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்...ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

மருத்துவ பட்ட மேற்படிப்பு எம் டி அவசர சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவ கல்வி எனும் புதிய பாட பிரிவு தொடங்கப்பட்டு, மாநில ஒதுகீட்டில் 50 விழுக்காடு, மத்திய ஒதுக்கீட்டில் 50 விழுக்காடு இடங்கள் என உறுதி செய்யப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

உலக வங்கி நிதி உதவி:

மேலும், இந்த துறையை உருவாக்க உலக வங்கி நிதி உதவியுடன் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் இப்பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் முதன்முறையாக துவங்கப்பட்ட இந்நிகழ்வு நிதி ஆயோக் அமைப்பால் பாராட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்