டீ கடையில் நுழைந்த பாம்பு..! அச்சத்தில் அலறிய வாடிக்கையாளர்கள்..!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டீ கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு...

டீ கடையில் நுழைந்த பாம்பு..! அச்சத்தில் அலறிய வாடிக்கையாளர்கள்..!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக செயல்படும். தினமும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் தொடர்பாக, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வார்கள். ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் உணவு மற்றும் தேநீர் அருந்த அலுவலகத்தின் பின்புறத்தில் தனியார் கடைகள் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை முருகன் என்பவர் தனக்கு சொந்தமான தேநீர் கடையை திறந்துள்ளார். கடைக்கு தேநீர் அருந்த பலர் உள்ளே வந்துள்ளனர். அப்போது கடையின் உள்ளே  சுவற்றில் கருமையான நிறத்தில், சுமார் 2 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்துள்ளது. 

இதனைப்பார்த்த கடைக்கு வந்தவர்கள் அச்சத்தில் அலறி அடித்து வெளியில் ஓடினர். பின்னர் கடையின் உரிமையாளர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடைக்குள் தஞ்சம் அடைந்து பாம்பை மிக லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.