அதிமுக - பாஜகவிற்குள் ஒற்றுமை இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!

அதிமுக மற்றும் தோழமை கட்சியான பாஜகவிற்குள் ஒற்றுமை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜகவிற்குள் ஒற்றுமை இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், உலக யோகா தினத்தை முன்னிட்டு, 415 மாணவர்கள் கடினமான சம கோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்தனர்.

இதில், பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அதிமுக மற்றும் தோழமை கட்சியான பாஜகவிற்குள் ஒற்றுமை இல்லை என தெரிவித்தார். மேலும் அவர் கூறியது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும், இதனை தற்போது அவரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.