அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை ஒத்திவைக்க கோரி இ.பி.எஸ்க்கு ஒ.பி.எஸ். தரப்பு கடிதம் !

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை ஒத்திவைக்க கோரி ஒ.பி.எஸ். தரப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை ஒத்திவைக்க கோரி இ.பி.எஸ்க்கு ஒ.பி.எஸ். தரப்பு கடிதம் !

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கோரிக்கை விஸ்பரூபம் எடுத்துள்ளது. அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வர எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக இருக்கும் நிலையில், ஒற்றை தலைமை நிலைப்பாட்டுக்கு ஓ. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து வருகிறார். 

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை ஒத்திவைக்க கோரி ஓபிஎஸ் மற்றும் வைத்தி லிங்கம் தரப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

அதில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுப்பப்பட்டதாகவும் தற்போது அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழக சட்ட விதிகளின் படி ஒற்றை தலைமையை ஏற்படுத்த தனிதீர்மானம் கொண்டு வர முடியாது எனவும் , நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒற்றை தலைமை கோரிக்கையால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடிய சூழல் உள்ளதாகவும், 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வைத்தி லிங்கம், ஓ பன்னீர்செல்வத்திற்கு 30 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாகவும் அதில் 15 பேர் நேரடியாக ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் 15 பேர் நடுநிலை காத்து வருவதாகவும் கூறினார். ஓ. பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் தனித்தீர்மானம் நிறைவேற்ற அதிமுக சட்டத்தில் இடம் இல்லை எனவும் கூறினார். மேலும் பழனிச்சாமி தரப்பு சர்வாதிகார போக்குடன் நடந்துக் கொள்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்வார் எனவும் கூறினார்,