சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணித்த அதிமுக!

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது.

சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணித்த அதிமுக!

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது.

தமிழக சட்டப்பேரவையின் 100வது ஆண்டு விழா மற்றும், முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திறப்பு விழா நடைபெற்றது.  இந்த விழாவில் பங்கேற்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த விழாவை அதிமுக புறக்கணித்தது. இது தொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு சட்டமன்ற வரலாற்றை  மாற்றியமைத்து விழா கொண்டாடுவதாக குற்றம் சாட்டினார். எனினும் ஜெயலலிதா படத்திறப்பு  விழாவை திமுக புறக்கணித்தற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருணாநிதி படத்திறப்பு நிகழ்வை அதிமுக புறக்கணித்ததாக கூறப்படுகிறது.