கட்சிக்கொடி விவகாரம்; ஒ.பி.எஸ் தரப்பு மீது அதிமுகவினர் புகார்!

கட்சிக்கொடி விவகாரம்; ஒ.பி.எஸ் தரப்பு மீது அதிமுகவினர் புகார்!

நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி அதிமுக கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதை கண்டித்து ஒ.பி.எஸ் தரப்பினர் மீது அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

ஆதிமுக கட்சி கொடி மற்றும் சின்னத்தை சட்ட விரோதமாக  பயன்படுத்துவதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் எம். பாலசந்திரன் தலைமையில் அதிமுக தரப்பினர் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பாலசந்திரன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொருட்படுத்தாமல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனை  கண்டித்து தலைமை உறுப்பினர்கள் ஆலோசனையின் படி புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார்.  

மேலும் திமுக தூண்டலின் பேரில் ஓபிஎஸ் தரப்பினர் கோடநாடு குறித்து பேசி வருகின்றனர். திமுகவின் பீ டீம் ஆக செயல்பட்டு வருகின்றனர். இதற்கு இவர்கள் நேரடியாக திமுக வின் கொடிகளையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார். 

அப்பொழுது செய்தியாளர்கள் புகாரில் ஒ.பி.எஸ் பெயர் குறிப்பிடவில்லை என்று எழுப்பிய கேள்விக்கு 
ஒ.பி.எஸ் தரப்பினர் என்றால் அவரையும் உள்ளடக்கிய ஆட்கள் என்பதுதாக் பொருள் என்று விளக்கினார். அப்பொழுது அங்கிருந்த மகளிர் அணி செயலாளர் கோகிலா, திடீர் என  ஓபிஎஸ் இன் மனைவியின் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்ததால் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிக்க:தக்காளியுடன் மாயமான லாரி கண்டுபிடிப்பு!