வாக்காளர்களுக்கு வைக்கும் மை அழிகிறதா...? தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்!

வாக்காளர்களுக்கு வைக்கும் மை அழிகிறதா...? தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : விறுவிறு வாக்குப்பதிவு...காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி மையங்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவுக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவின் துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான இன்பதுரை வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில், இவ்வாறு அழியுமாறு மை வைக்கபட்டால் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், உடனடியாக அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.