நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் 2வது கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொகுதிகளை பங்கிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்து, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்த அதிமுக, கூட்டணியிலிருந்து பாஜக விலகியதை அடுத்து, இன்று   2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் சேலம், ஆவடி, திருச்சி, மதுரை., சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சிகள், தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, அரியலூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் வட்டம் வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன.