பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு...

தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வரும் நிலையில் அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு...

தமிழக முதலமைச்சரக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக பட்ஜெட் இன்று தாக்கல் தொடங்கியது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதன் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அதேபோல, தமிழக சட்டசபையில் முதன் முறையாக இன்று காகிதமில்லா இ - பட்ஜெட் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
தனது மேஜையில் இருக்கும் திரையில் தோன்றும் பட்ஜெட் பார்த்து உரையை படித்து வருகிறார்.

இதற்காக, அனைத்து எம். எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை, கணினி திரையில் ஒளிரும். இது தவிர அனைத்து எம். எல்.ஏ.,க்களுக்கும், கையடக்க தொடுதிரை கணினி வழங்கப்பட உள்ளது. இதிலும், பட்ஜெட் உரை இடம் பெற்றிருக்கும். புத்தகத்தை புரட்டுவது போல, பக்கங்களை முன்னும் பின்னும், மேலும் கீழும் எம். எல்.ஏ.,க்கள் நகர்த்தி உரையை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களுக்கு பேச அனுமதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிய நிலையில், அதற்கு பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் நிச்சயம் பேச அனுமதிக்கப்படும் என கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர் பட்ஜெட்டை புறக்கணித்து சட்டபேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.