பால், காய்கறி விலை உயர்வைக் கண்டித்து நீலகிரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

பால், காய்கறி விலை உயர்வைக் கண்டித்து நீலகிரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுகவின் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், காய்கறி விலை உயர்வை கண்டித்து கழுத்தில் பால் காய்கறிகளை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாகச் சாதாரண ஏழை, எளிய மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக சார்பில் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.   

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்  அதிமுகவின் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் பால், சிறு தானியங்கள், காய்கறி விலை அத்தியாவசிய விலை உயர்வை கண்டித்து காய்கறிகளை மாலையாக கோர்த்து மாலை அணிந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது தேசிய அதிமுக மாவட்ட செயலாளர் நீலகிரி மாவட்டத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகள் இருந்து வருகிறது இங்கு எம்பியாக இருக்கக்கூடிய ராசா இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை உதகையில் பூதாகரமாக உருவாக்கி வரும் மார்க்கெட் கடை விவகாரத்தை இதுவரை முடித்து தரவில்லை என பேசினார்.

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க    | தக்காளி விக்கிற விலைக்கு : காய்கறி மாலை அணிந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..?