எல்லா பிரச்சனைகளுக்கும் அதிமுகவின் கவன குறைவு தான் காரணம்.... நிதியமைச்சர் பி.டி.ஆர் 

கடந்த ஆட்சியில் நிதி நிர்வாகத்தை மிகவும் மோசமாக மேலாண்மை செய்த அதிமுக அரசின் மெத்தனத்தை ஈடுகட்ட தற்போது நிதியமைச்சராக பொறுப்பேற்று பழனிவேல் தியாகராஜனின் ஐடியாக்கள் என்னென்ன..

எல்லா பிரச்சனைகளுக்கும் அதிமுகவின் கவன குறைவு தான் காரணம்.... நிதியமைச்சர் பி.டி.ஆர் 

தமிழ்நாடு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.5-4 சதவீதம் வருவாய் இழப்பின் காரணமாக இழந்துள்ளது. இது மிகப்பெரிய பிரச்சினை. அதை மீட்பதில் இவர்கள் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் 2014 முதல் 2021 வரை நடந்த சீர்கேடு. 

ஜெயலலிதா முழுவதுமாக கட்டுப்பாட்டில் இருந்தவரையில் நிலை ஓரளவு சீராக இருந்துது. ஆனால், ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் ஆட்சி அவரின் நேரடி கண்பார்வையில் இருந்து விலகி, நிலை மிகவும் மோசமானது. அவரின் மறைவுக்கு பின்னர் முழுவதுமாக சீர்கெட்டு போனது.
 
2004 முதல் 2014 வரையில் வருவாய் சமநிலை அல்லது வருவாய் உபரி மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு திடீரென ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறையில் சாதனைகளை புரியத் தொடங்கியது. அதன் விளைவாக கடன் கூடிக்கொண்டே சென்றது. இன்னும் ஒரு மாதத்தில் மாநில நிதி நிர்வாகத்தில் என்ன தவறுகள் நடந்ததுள்ளன என்பதை ஒரு விரிவான வெள்ளை அறிக்கை மூலமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

துறையின் பொறுப்பை எடுத்துக் கொண்ட பிறகு, நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தவறுகளில் பெரும்பகுதி அக்கறையின்மையால் ஏற்பட்ட விளைவுகள் தானே தவிர தெரிந்தே அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் நிலை மோசமாகி கொண்டே சென்ற போதும், தவறுகளை களைந்து நிலையை சீர்செய்ய அவர்கள் முயற்சிக்கவில்லை.

இந்த கவனக்குறைவு மிகப்பெரிய பிரச்சினை, அது ஏன் நடந்தது என்ற கேள்வியை நாம் அடைந்துள்ளோம்.  எவை முன்னுரிமை பெற வேண்டும் என்பது குறித்த புரிதல் இன்மை, திறமையின்மை மற்றும் முழு திட்டமிடலுடன் நடந்தேறிய ஊழல் போன்றவை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. நடந்தேறிவிட்ட இந்த கவனக்குறைவை 100% முழுமையாக விளக்குவது கடினம். வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் போது இவை தெளிவாகும்.