ஆவின் தீபாவளி சிறப்பு காம்போ விற்பனை...!

தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சிறப்பு காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆவின் நிறுவனம் சூப்பர் சேவர் காம்போ என்ற தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய உள்ளது. இதில், 250கிராம் மைசூர்பாகு, 200கிராம் மிக்சர், பிஸ்கட் மற்றும் சாக்லேட் அடங்கிய காம்போ 325 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழப்பு... அமெரிக்காவில் பயங்கரம்!

இதேபோன்று, பாதுஷா, பாதாம் மிக்ஸ், குலாப் ஜாமூன் மற்றும் சாக்லேட் அடங்கிய காம்போ, 525 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தலா 250 கிராம் அடங்கிய காஜு பிஸ்தா ரோல், காஜுகட்லி, பாதுஷா, நட்ஸ் அல்வா அடங்கிய காம்போ, 965 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.