தீபாவளிக்கு தயாராகும் ஆவின்...

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தீபாவளிக்காகவே சிறப்பாக தயாரிக்கும் இனிப்புகளுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு தயாராகும் ஆவின்...

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின் போது பால் பாக்கெட்டுகளின் வழியே பண்டிகை தின வாழ்த்துகளை ஆவின் நிறுவனம் தெரிவிக்கும். பாக்கெட்டுகளிலேயே வாழ்த்துகள் அச்சிடப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படும்.

அந்த வகையில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்கான வாழ்த்துகளை பால் பாக்கெட்டுகளின் வழியே ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ‘ஆவின் இனிப்பு வகைகளை வாங்கி மகிழ்வீா்’ எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | தீபாவளியை தித்திப்பாக்க...ஆவினில் ரூ. 200 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு !

அதுமட்டுமின்றி தீபாவளி ஆவின் இனிப்பு வகைகளின் பெயா்களையும் வெளியிட்டுள்ளது.நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜூ பிஸ்தா ரோல், காஜூ கத்தலி, ஆவின் ஸ்பெஷல் மிக்சா் போன்ற இனிப்பு கார வகைகள் விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தொழிற்சாலையில் அமைச்சர் திடீர் ஆய்வு...முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பணி நீக்கம்!