”இராஜ்பவனின் தோட்டக்காரரும் தமிழ்நாட்டின் ஆளுநரும் ஒன்று” சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்!

”இராஜ்பவனின் தோட்டக்காரரும் தமிழ்நாட்டின் ஆளுநரும் ஒன்று” சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்!

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்கியது குறித்து, தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள் என்று ஆளுநரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.


வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி உள்ளிட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைதுச்செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க : ”கிண்டிக்கு ஓரு கேள்வி” ஆளுநருக்கு எதிராக சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்...!

இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை ஆளுநர் நீக்கியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு. வெங்கடேசன், ”ஆளுநரை நீக்க இராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ; அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை என்றும், இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே
நிறுத்துங்கள் என்றும்,  தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள்” என்றும் ஆளுநரை விமர்சித்துள்ளார்.