"சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் விலைவாசி குறையும்" - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா.

"சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் விலைவாசி குறையும்" -  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா.

கொரோனா காலத்தில் இருந்தது போன்று வேளாண் பொருள்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், உணவுப் பொருள்களை சேமித்து வைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர் கூறியதாவது:- 

” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை. குறிப்பாக, அவர்களது தொகுதி வரையறையை தெரியாத எம்பிக்கள் அதிகம் பேர் உள்ளனர்.  இது போன்ற எம்பிக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதற்கு வணிகர் சங்க பேரமைப்பு தேர்தலில் நிற்காமல் முயற்சி எடுக்கும்.

நேரடியாக தேர்தலில் பணியாளர் சங்க பேரமைப்பு போட்டியிடாது ஆனால் மறைமுகமாக யார் வரவேண்டும்?  யார் வரக்கூடாது?  என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வணிகர்கள் இருப்பார்கள். 

லூலு மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக அரசிடம் பொய்யான தகவல்களை கூறி தங்களுடைய கிளைகளை திறந்து வருகின்றனர். குறிப்பாக, வேலைவாய்ப்பில் 5 சதவீத தமிழர்கள் கூட அதில் இல்லை. இன்றைய தமிழக இளைஞர்களுக்கு
வணிகர்கள் வேலை வாய்ப்பு கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். ஆனால் இளைஞர்கள் முன் வரவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ ஜிஎஸ்டி முறைகேடு செய்யும் வணிகர்கள் மீது தமிழாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற முடிவிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனை மறுபரிசீலனை செய்வதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளோம்; ஜிஎஸ்டி வரி வசூல் என்பது மிகப்பெரிய நெருக்கடியை வியாபாரிகளுக்கு தந்து கொண்டுள்ளது; மத்திய அரசு ஜிஎஸ்டியை அமலாக்க துறையோடு இணைத்து வருகிறார்கள் வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்ற தகவல் தற்போது வந்துள்ளது” என்று கூறினார். 

மேலும், கொரோனா காலத்தில் இருந்தது போன்று வேளாண் பொருள்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்திற்கு வணிகர்கள் காரணம் கிடையாது என்றும் கூறினார். தக்காளி குறைவான விலை விற்கும் நேரங்களில் மாநில அரசை நேரடியாக விவசாயிடமிருந்து விலை நிர்ணயம் செய்து தக்காளியை கொள்முதல் செய்து அதனை பவுடர் ஆக்கி விற்பனை செய்தால் வணிகர்கள் விற்பனை செய்ய தயாராக உள்ளோம் அது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்

அதோடு,  உணவுப் பொருள்களை சேமித்து வைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்,  தட்டுப்பாடு ஏற்படும் நிலையை அரசு முன்பே கணக்கிட்டு அதற்குண்டான முன்னேற்பாடு பணிகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும், பன்னாட்டு நிறுவனங்கள் பொருட்களை பதிக்க வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது”, என கூறினார். 

தொடர்ந்து பேசுகையில்: ” இரண்டாவது முறையாக மின்சார கட்டணம் உயர்த்தியதால் வணிகர்களுக்கு மட்டும் பாதிப்பு கிடையாது வணிகர்கள் ஏற்றப்பட்ட மின்சார உயர்வை விலை உயர்வு செய்து பொருட்களை விற்பனை செய்யும் நிலை ஏற்படும் இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். கொள்ளை அடிப்பவர்களுக்கு வேண்டுமானால் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் ஆனால் வணிகர்களிடம் அது போன்ற நிலை இருக்காது” என  அவர் கூறினார்.

இதையும் படிக்க   | "நூற்பாலைகளின் கோரிக்கையை பரிசீலித்திடுக" வைகோ அறிக்கை!