ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் 3-வது நீதிபதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு:  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால், இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து, ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில், 3-வது நீதிபதி கருத்தை அறியலாம் ஆனால் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என  உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து.

இது  தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேந்திர பாலாஜி வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முகாந்திரம் உள்ளது எனவும் , எனவே வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், 3-வது நீதிபதி உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என குறிப்பிட்டு, மேல் முறையீட்டை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.