மக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை தேவை!

தூத்துக்குடி மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் விதத்தில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 13-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக லயன்ஸ் டவுன், அய்யனடைப்பு, சில்வர்புரம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர், மனு அளித்தவர்கள் யாரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிடையாது என்றும், பணம் பெற்றுக்கொண்டு சிலர் தங்களை மீனவ மக்கள் என்று கூறி, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.