போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை... சிறப்புப்படை அமைக்க உத்தரவு...

போக்குவரத்தை திறமையான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு, சிறப்புபடை அமைக்க காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை... சிறப்புப்படை அமைக்க உத்தரவு...

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை திறமையான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு, சிறப்புபடை அமைக்க மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை ஜி.எஸ்.டி. சாலையில், உணவகம் உள்ளிட்ட நிறுவனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும்,  இந்த நிறுவனங்களின் முன் சட்ட விரோதமாக வாகனங்கள் நிறுத்தபடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் புதுவை நகர் சிறு தொழில் வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை   திறமையான முறையில் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க  சிறப்புபடை அமைக்க மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். விதிமீறும்  வணிக நிறுவனங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள்  உரிய நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்துச் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய  நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக டிசம்பர் 21ம் தேதி அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.