நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் ...ஜி.கே. வாசன்

தீபாவளிக்கு வெளியாகிற ரஜினிகாந்த் படம் வெற்றியடைய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் ...ஜி.கே. வாசன்

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறுகையில்,

இல்லம் தேடி கல்வி திட்டம் கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம் மாணவர்களின் கல்வி என்பது நாட்டினுடைய வளர்ச்சி என்றும் இதற்கு அரசியல் சாயம் தேவையில்லை என கூறினார்.  

கொரோனா முடியாத நிலையில் டெங்கு, மலேரியா ஆகியவையும் பரவி வருகின்றன. இந்தச் சூழலில் டாஸ்மாக் பார்களை திறப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. எனவே, டாஸ்மாக் பார்களைத் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நமது உரிமைகளை தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்க கூடாது  என்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் விவசாயிகளுக்கு தமிழக அரசு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்றார். 

தீபாவளிக்கு வெளியாகிற ரஜினிகாந்த் படம் வெற்றியடைய வேண்டும், ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அதிகப்பங்கு எடுத்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு சூழ்நிலையை குறைக்க நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.