அமலுக்கு வந்த கூடுதல் தளர்வுகள்... கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை காவல்துறையினர் கண்காணிப்பு...

ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தகவல்கள்  அமலாகியுள்ள நிலையில், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் தியேட்டர்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்ககளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. 

அமலுக்கு வந்த கூடுதல் தளர்வுகள்... கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை காவல்துறையினர் கண்காணிப்பு...

தியேட்டர்கள் இன்றுமுதல் திறக்கப்படும் நிலையில், வளாகங்கள் மற்றும் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடித்து பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.  

கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதலே பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரைக்கு  தொடர்ச்சியாக பொதுமக்கள் வருகை  தந்த வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு வரும் பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு இன்று காலை முதல் பேருந்து சேவை துவங்கியுள்ளது. ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனை சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்ற அறிவிப்பும் இன்றுமுதல் அமலாகிறது.

இதேபோல் உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்களிலும் இன்றுமுதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இரவு 9 மணி வரை இயங்கி வந்த அனைத்து கடைகளும், இன்றுமுதல் ஒரு மணி நேரம் கூடுதலாக இரவு 10 மணி வரை இயங்கலாம் என்ற உத்தரவும் அமலாகியுள்ளது.